Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2021 10:25:06 Hours

இலங்கை தொண்டர் படையணியின் தளபதி 2 வது இலங்கை வைத்திய படைக்கு விஜயம்

இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட திங்கட்கிழமை (21) பனாகொடவிலுள்ள 2 வது இலங்கை இராணுவ வைத்திய படையணிக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

தளபதியை 2 வது இலங்கை இராணுவ வைத்திய படையின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.ஏ.ஏ.டபிள்யூ.விஜேசிங்க வரவேற்றார்.

முறையாக வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் 2 வது இலங்கை இராணுவ வைத்திய படையின் தங்போதைய பணிகள் மற்றும் பங்களிப்புச் செயற்பாடுகள் தொடர்பில் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதையடுத்து படைப்பிரிவு வளாகத்தை மேற்பார்வை செய்த தளபதி அனைத்து நிலைகளுக்குமான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.

இதன்போது இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க, பிரிகேடியர் நிர்வாகம் பிரிகேடியர் ரோஹித விஜேரத்ன, இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரிகேடியர் வழங்கல் பிரிகேடியர் சஞ்சய பத்திரன, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தொண்டர் படை ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் கீர்த்தி விஜேரத்ன மற்றும் இலங்கை இராணுவ வைத்திய படையின் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு இந்நிகழ்வில் வாய் மற்றும் முகமாற்று வைத்திய நிபுணர் பிரிகேடியர் பராக்கிரம விக்கிரமசூரிய, மயக்க மருத்துவ நிபுணர் பிரிகேடியர் ரேகா மகுல்லொலுவ, சமூக மருத்துவ துறை முதுமாணி கேணல் லக்மினி ரணசிங்க, சமூக மருத்துவ நிபுணர் கேணல் அயின்றலால் பாலசூரிய, அறுவை சிகிச்சை நிபுணர் கேணல் டயிள்யூ.டி.டி .சில்வா மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வின் போது சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன.