24th June 2021 10:30:06 Hours
1 வது பொறியியல் சேவை படையினரால் சுகாதார துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் மொறட்டுவை லுனாவ வைத்தியசாலையின் பழைய கட்டிடமொன்று புதுப்பிக்கப்பட்டு இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டதுடன், புதன்கிழமை (16) மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இத் திட்டமானது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 1 வது பொறியியல் சேவை படையினரால் குறுகிய காலத்துக்கு நிறைவு செய்யப்பட்டது.
தொற்று நிலைமை உக்கிரமடையும் போது நோயாளிகளை பராமரிக்க கூடிய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற பாதுகாப்பு படைத் தளபதியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய மேற்படி பகுதியை விரைவில் இடைநிலை பராமரிப்பு மையமாக மேம்படுத்துமாறு மேற்கு பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் வழங்கப்பட்ட கட்டளைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், 142 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிலாந்த பெர்ணான்டோ, முதலாவது பொறியியல் சேவைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பீஏஎஸ்எஸ் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.