24th June 2021 10:15:06 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவினால் 231 பிரிகேடின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மிகவும் அவசியமாகவிருந்த பிசிஆர் இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், அதனை கொண்டு நாளாந்தம் 1000 பரிசோதனைகளை நடத்தும் இயலுமை காணப்படுகின்றது.
மேற்படி நடவடிக்கைக்கு இராணுவம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இணங்க மட்டக்களப்பு தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களின் நிதி உதவியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம் கிடைக்கப்பெற்றது.
23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி, சில தினங்களுக்கு முன்பு மேற்படி இயந்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.