23rd June 2021 16:30:28 Hours
மட்டக்களப்பு 23 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 231 வது பிரிகேடின் முயற்சியின் விளைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொவிட் – 19 தொற்றாளர்கள் மற்றும் ஏனைய நோய் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அவசியமான மருத்துவ உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
மேற்படி மருத்துவ உபகரணங்களுள் 2 சிறிய இரத்த பரிசோதனை உபகரணங்கள், அருவி அமைப்பின் நிறைவேற்று அதிகாரி மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷனி, அதிவேக மைக்ரோலிட்டர் இரத்த பரிசோதனை இயந்திரம் ஒன்று திரு எஸ்.எஸ்.நல்லரத்னம் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் ஆர்டி வகை பிசிஆர் இயந்திரங்கள் மற்றும் வைரல் நியூகிளிக் வகை இயந்திரங்கள், மட்டக்களப்பு மத விவகார அமைப்பினாலும், ஆய்வுகூட உபகரண பாதுகாப்பு இயந்திரம் மற்றும் மைக்ரோபிபேட் இயந்திரங்கள் திரு எஸ்எஸ் ஈஸ்வரன் அவர்களினாலும், H2O2 புமிகேடர் மற்றும் 70 செல்சியஸ் குளிரூட்டி இயந்திரங்கள் திரு செல்வராஜ் மற்றும் சில வைத்தியர்கள் ஒன்றிணைந்தும் வெப்ப சீராக்கி இயந்திரங்களும் மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டன.
மேற்படி மருத்துவ உபகரணங்களின் அவசியம் அதிகமாக காணப்பட்டமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திரு கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது மட்டக்களப்பு வைத்தியசாலை அதிகாரிகளால் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மேற்படி உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேற்படி மீளாய்வுக் கூட்டம் 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி ஆகியோரின் பங்குபற்றலில் இடம்பெற்றது.