23rd June 2021 10:10:29 Hours
இன்று காலை (23) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,093 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 22 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட. ஏனைய 2,071 பேர் உள்நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களில் அதிகமாக 364 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 322 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 292 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 1,093 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இன்று காலை (23) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 243,912 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் , 137,925 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.
இன்று (23) காலை 0600 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2,009 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர்.
இன்று (23) வரையில் ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 72 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,768 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று (23) காலை 0600 மணி வரையான காலப்பகுதியில்(கடந்த 24 மணி நேரத்தில்) 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 423 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வீடு திரும்பினர்.
ஜூன் மாதம் (21) இலங்கைக்குள் 71 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 33 பெண்களும் 38 ஆண்களும் அடங்குவர்.
இன்று (23) நிலவரப்படி நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தலிலிருந்த கிராம சேகவர் பிரிவொன்று விடுவிக்கப்பட்டுள்ளதோடு 9 பொலிஸ் பிரிவுகள் உள்ளடங்களாக 340 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இன்று (23) காலை தனிமைப்படுத்தப்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்களாக 64 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தில் விதிக்கப்பட்டிருந்த பயணக்கபட்டுபாடுகள் நடைமுறையில் இல்லை.