24th June 2021 10:50:32 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் அதன் கட்டளை படைப்பிவுகள் மற்றும் பிரிகேட்களின் ஒத்துழைப்புடன் அம்மாவட்டத்தில் வாழ்வாதாரத்துக்கு போதியவளவு வருமானத்தை பெறாத குடும்பங்களின் வருமானத்தை ஊக்குவிப்பதன் பொருட்டு அண்மையில் கரச்சி, கிளிநொச்சி மற்றும் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலக மக்களுக்கு பொருளாதார பெறுமதி மிக்க மரக் கன்றுக்களை வழங்கினர்.
இத்திட்டம் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அறிவுரைக்கமைய , 57 படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 57 படைப்பிரிவினர் மற்றும் 571, 573, 573 பிரிகேடினரால் 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர மற்றும் 573 பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்படி படைப்பிரிவுகளால் விவசாயம், மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற துறைகளில் வருமானம் ஈட்டும் நடைமுறைகளை ஊக்குவித்தனர். அதன்படி 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினர் 30 சுண்டக்காய் செடிகளை 15 தேவையுள்ள குடும்பங்களுக்கும் வழங்கியிருந்ததுடன், 800 போஞ்சி செடிகளை 30 தேவையுள்ள குடும்பங்களுக்கும், 9 வது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் படைகளால் கரச்சி குடும்பங்களுக்கு தலா 30 மரக்கறி செடிகள் என்ற அடிப்படையில் 750 செடிகள் பகிரப்பட்டன.
மேலும் 9 வது இலங்கை சிங்க ப்படையினரால் 15 குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 50 தர்பூசணி விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் 77 உறுப்பினர்களை உள்ளடக்கிய 22 குடும்பங்களுக்கு மீன்பிடி வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொடுப்பதற்காக திரயார் குளத்தில் மீன்குஞ்சுகளை விடுவித்ததோடு, 6 வது சிங்கப் படை சிப்பாய்களால் 30 குடும்பங்களின் 110 பேர் பயன் பெரும் வகையில் விஸ்வமடு குளத்தில் மின்குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன.
அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களிலும் அதன் கட்டளை பகுதிகளில் வாழும் சமூகத்தின் வாழ்வாத்தார்தை மேம்படுத்துவதற்கான ஆதரவுகளை வழங்க வேண்டும் என்ற இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமை இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.