23rd June 2021 12:10:29 Hours
வவுனியா வணிக சமூகத்தின் உதவியுடன் 7 வது இலங்கை சிங்கப் படையினரால் வன்னி போகஸ்வெவ கிராமம் – 1 இலுள்ள வறிய குடும்பங்களுக்கு தலா 3500 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 150 உலர் உணவு பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (20) விநியோகிக்கப்பட்டன.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில மற்றும் 563 வது பிரிகேட் தளபதி பண்டுக பெரேரா, 563 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எம்ஏசீபி மாரசிங்க ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மிகவும் தேவையுள்ள பகுதிகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
7 வது இலங்கை சிங்கப் படை கட்டளை அதிகாரி மேஜர் எம்ஏஜேஎம் பெரேரா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு 56 படைப்பிரிவு, 563 பிரிகேட் மற்றும் 21 வது இலங்கை சிங்கப் படையினரும் பங்களிப்பு வழங்கியதுடன் நிவாரண பொதிகளையும் விநியோகித்தனர்.
தற்போதைய நெருக்கடியான தொற்றுநோய் காலத்தில் அனைத்து படைகளும் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்ற பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமை இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
563 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி , 7 வது இலங்கை சிங்கப் படையின் இரண்டாம் கட்டளை அதிகாரி 21 வது சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் படையினருடன் சமூக பணிகளில் பங்கேற்றனர்.