Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2021 18:00:58 Hours

கிளிநொச்சி தளபதி 4 வது (தொ) இலங்கை மகளிர் படை முகாமிற்கு விஜயம்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அண்மையில் கிளிநொச்சியிலுள்ள 4 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது தளபதிக்கு 4 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.சில்வா அவர்களால் வரவேற்பளிக்கபட்டதோடு, அவரது வருகையின் நினைவாக படைமுகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்கவும் அழைக்கப்பட்டார். பின்னர் சிப்பாய்களின் பணிகள் தொடர்பில் 4 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி தளபதிக்கு விளக்கமளி்த்தார்.

விஜயத்தின் போது தளபதி முகாம் பணிகளை ஆராய்ந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட குழுவினர் முன்பான உரையொன்றை நிகழ்த்தியதோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகலரும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றினர்.

மேலும், தேசத்தின் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காகவும் அதற்கான பணிகளைச் செய்வதற்காகவும் ஏற்ற வகையில் திறன்களை வளர்ப்பதற்கான நிலையான பயிற்சியின் மூலம் அவர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் மகளிர் படையினரின் நன்மதிப்பை கட்டியெழுப்புவதற்காக மகளிர் படையணியின் பணிகளையும் பாராட்டினார்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி தீபாய் ஹத்துருசிங்க மற்றும் ஏனைய சிரேஸ்ட பதவிநிலை அதிகாரிகளும் விஜயத்தில் கலந்துகொண்டனர்.