22nd June 2021 17:40:04 Hours
வவுனியா ஆயுர்வேத சித்த வைத்தியசாலை படையினரால் 100 பேரை பராமரிக்கும் வசதிகளை கொண்ட இடைநிலை சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு புதன்கிழமை (16) சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டம் 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில அவர்களின் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்பட்டது.
ஆயுர்வேத வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி வைத்தியர் சர்வாணந்தன் மற்றும் ஊழியர்களின் உதவியுடன் 100 நோயாளர்களை பராமரிக்ககூடிய வகையில் இராணுவ அதிகாரிகளால் குறித்த இடைநிலை பராமரிப்பு மையம் தயார்படுத்தபட்டுள்ளது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய நாட்டில் நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் பட்சத்தில் பயன்படுத்த கூடிய வகையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிகாட்டலுக்கமைய வைத்தியசாலை சில தினங்களில் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது.
இவ்வாறு 100 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளுடனும் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையத்தை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களினால் மாவட்ட சுகாதார பணிப்பாளரிடம் முறையாக கையளித்திருந்ததுடன், 56 வது படையினரால் மேற்படி பணிகள் 16 ஜூன் 2021 அன்று ஆரம்பிக்கப்பட்டன.
56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில, 562 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்ச ஆகியோரின் மேற்பார்வையில் மேற்படி பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதுடன், கட்டமைப்பு பணிகள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்ப்பட்டதுடன் இராணுவத்தினரால் கட்டில்கள் கட்டில் விரிப்புக்கள், மெத்தைகள், தலையணைகள். தலையணை உறைகள், நுளம்பு வலைகள், நாட்காலிகள், சலவை இயந்திரங்கள், நீர் கொதிக்கச் செய்யும் இயந்திரங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
சில இராணுவ மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்நிலையத்தை கையளிப்பதற்கான நிகழ்வு நடைபெற்றது.