22nd June 2021 19:00:58 Hours
முல்லைத்தீவு வைத்தியசாலையில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களின் அறிவுரைக்கமைய படையினரால் இடைநிலை பாராமரிப்பு நிலையமான மேம்படுத்தப்பட்டு முழுமையாக புதுபிக்கப்பட்ட வார்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் சுகாதார அதிகாரிகள் பங்கேற்புடன் 20 ஜூன் 2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிப்பாய்கள் அவசியத்தை உணர்ந்துகொண்டு மாற்றியமைக்கப்பட்ட 24 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான வசதிகளுடன் மேம்படுத்திக் கொடுத்தனர்.
நாட்டில் தொற்றுநோய் பரவல் அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் அந்த நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு அவசியமான தயார் நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்களால் மேற்படி இடைநிலை பராமரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
இந்த வார்டுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்கள், கட்டில்கள், மெத்தைகள் என்பன பொதுஜன பொறியியலாளர் முன்னணியினால் வழங்கப்பட்டன. பொதுஜன முன்னணியின் பொறியியல் முன்னணியின் தலைவர் திரு. விஜித ஹேரத் யாப்பா உட்பட முல்லைத்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் குழு, ஒருங்கிணைப்பு அதிகாரி பொறியியலாளர் ரணில் பிரியதர்ஷன, பொறியியலாளர் நிஷாந்த குணதிலக, வட மத்திய வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், பொறியியலாளர் கே. ஆரியரத்ன, வைத்திய நிபுணர் சந்தருவான் பண்டார, மயக்க மருந்து வைத்திய நிபுணர்களான இந்திரரத்ன நிமலசாந்த, சுதேஷ் மதுவந்த, வைத்தியர் சாலிந்த பண்டித மற்றும் சில இராணுவ அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து நன்கொடைகளை வழங்கியிருந்தனர்.