Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd June 2021 19:51:13 Hours

மாலி அமைதிகாக்கும் படைகளின் தளபதி இலங்கை அமைதிகாக்கும் படை முகாமிற்கு விஜயம்

அண்மையில் இலங்கை இராணுவ அமைதிகாக்கும் படை முகாமிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட மாலி ஐ.நா அமைதிகாக்கும் படைகளின் தளபதி லெப்டினன் ஜெனரல் டென்னிஸ் கில்லென்ஸ்போர் இலங்கை முகாம் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகின்ற நிலையில் முகாம்களை நகர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்ற சவாலான நிலைக்கு மத்தியில் இலங்கை இராணுவத்தின் அமைதிகாக்கும் படையினர் சேவையாற்றும் விதத்தை கண்டு தான் வியந்து போனதாகவும் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.நா.வின் பொது உடைமைகளை பாதுகாக்கும் அதே சமயத்தில் பொதுமக்களின் உயிர்களையும் பாதுகாக்கும் இராணுவம் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா சபைக்கு எவ்வித தீ்ங்குகளையும் ஏற்படுத்தாமல் பணியாற்றும் விதம் தொடர்பிலும் இலங்கை முகாமின் அர்ப்பணிப்பான சேவை தன்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது இலங்கை அமைதிகாக்கும் முகாமுக்கான தளபதி லெப்டினன் கேணல் தினேஸ் புலத்சிங்கள இலங்கை படைகளின் பணிகள் தொடர்பில் தளபதிக்கு எடுத்துரைத்தார்.