22nd June 2021 17:29:36 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் அறிவுரைக்கமைய ஜூன் 17 – 19 வரையான தினங்களில் இனுவில் பகுதியிலுள்ள மெக்லியோட் முதியோர் இல்லத்தில் யாழ். தலைமையக பாதுகாப்பு படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிரமதானத்தின் போது படையினர் முதியோர் இல்ல வளாகத்திலிருந்த குப்பைகளை அகற்றி, அங்குள்ள புற்களை அகற்றி தூய்மை செய்ததோடு சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், பூச்சாடிகளுக்கு வர்ணம் தீட்டல் போன்ற செயற்பாடுகள் ஊடாக வளாகத்தை முழுமையாக தூய்மையாக்கி அழகுபடுத்தினர்.
தூய்மையாக்கும் பணிகளின் நிறைவில் யாழ்.பாதுகாப்பு படைகளின் தளபதி மற்றும் படையினருக்கு முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் நன்றிகளை தெரிவித்ததோடு, தூய்மையாக்களுக்கு அவசியமான மூலப்பொருட்களையும் வழங்கியிருந்தனர்.