22nd June 2021 20:51:13 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் படையினரால் இளவாலை, பண்டந்தரிப்பு, சுல்லிபுரம், வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு 225 க்கும் மேற்பட்ட நிவாரண பொதிகள் வெள்ளிக்கிழமை (18) பகிர்ந்தளிக்கப்பட்டன. கனடாவில் வசிக்கும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் மற்றும் குருணாகல் முருகன் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் திரு எஸ்.சுரேஷ். ஆகியோரின் நிதியுதவியில் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய இந்த நிவாரணத் திட்டம் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்கமைய 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களின் மேற்பார்வையில் இடம் பெற்றது. இப்பகுதியில் நிலவும் கொவிட் - 19 தொற்றுநோயால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நெருக்கடிகளை கருத்திற் கொண்டு இத் திட்டம் மேற் கொள்ளப்பட்டது.
513 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ், 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மற்றும் 16 வது கெமுனு ஹேவா படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அந்தந்த கிராம சேவையாளர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.