21st June 2021 12:56:08 Hours
அக்போபுரா கிராம சேவகர் பிரிவில் உள்ள 11 குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் சமைத்த உணவுப் பொட்டலங்கள் படையினரால் விநியோகிக்கப்பட்டது. ஜூன் 15 அன்று 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான 56 வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி மற்றும் 563 பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிலவும் தொற்றுநோய் பரவல் நிலைமைக்கு மத்தியில் நிவாரண பொதிகளை வழங்குவதற்கான நிதி உதவிகளை பிரதேச செயலாளர் வழங்கியிருந்தார். மேற்படி நிகழ்வானது 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துணுவில, 563 பிரிகேட் தளபதி பண்டுக பெரேரா, ஏனைய பதவி நிலையினர் மற்றும் சிவில் விவகார அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.