21st June 2021 14:39:50 Hours
கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவ பரிசோதனைகளை நடத்தக் கூடிய வகையில் தயாராக இருப்பதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொவிட் - 19 வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆய்வுக்கூடத்தை புதுபித்தல் மற்றும் விரிவுபடுத்தல் பணிகளுக்கு 231வது பிரிகேட் படையினர் தங்களது உதவிகளை வழங்கினர்.
23 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்தவின் அறிவுறுத்தலின் பேரில், 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சியின் நேரடி மேற்பார்வையில் 231 வது பிரிகேட் படையினரால் இந்த திட்டம் திறம்பட செய்து முடிக்கப்பட்டது.
இவ்வாறு புதுபிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட ஆய்வுக்கூடம் வௌ்ளிக்கிழமை (18) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது 231 வது பிரிகேட் தளபதியினால் போதனா வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் திருமதி கே.கணேசலிங்கம் மற்றும் நுண்ணுயிரியலாளர் வைத்தியர் தேவகாந்தன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க படையினரால் மேற்படி பணிகள் குறுகிய நேரத்தில் முன்னெடுக்கப்பட்டன.