Header

Sri Lanka Army

Defender of the Nation

21st June 2021 13:48:08 Hours

300 நோயாளிகளை பராமரிக்க கூடிய வகையில் மாநாட்டு மண்டபம் மாற்றியமைக்கப்பட்டது

கொழும்பிலுள்ள புகழ்பெற்ற கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கும் பணிகளை ஆரம்பித்து அதனை நிறைவுசெய்த இராணுவம் வியாழக்கிழமை (17) முறையாக சுகாதார அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்தது.

14 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் அறிவுறுத்தலுக்கமைய, 14 வது படைப்பிரிவின் படையினரால், அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் கொவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையிலான இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கப்பட்டது. 142 வது பிரிகேட்டின் கீழ் உள்ள 14 வது விஜயபாகு காலட் படைப்பிரிவின் சிப்பாய்கள் , சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தங்களது பங்களிப்பனை வழங்கி அதனை சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா நாடு முழுவதிலும் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் பராமரிக்க உகந்த வகையில் குறித்த நிலையத்தின் கட்டில் வசதிகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்திக்கொடுக்குமாறு மேற்கு பாதுக்காப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு வழங்கிய அறிவுரைக்கமைய படையினரால் மேற்படி இடைநிலை பராமரிப்பு மையம் நிறுவப்பட்டது.

மேற்படி இடைநிலை பராமரிப்பு நிலையமானது 300 நோயாளிகளை பராமரிக்க கூடியதாக உள்ளதுடன், சகல மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

142 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ மற்றும் 14வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஈஎம்எம்எஸ்கே. ஏகநாயக்க ஆகியோரின் மேற்பார்வையில் படையினரால் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.