Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2021 21:00:39 Hours

பௌத்த பிக்குவின் நன்கொடையில் வன்னி கொவிட் – 19 நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் விநியோகம்

சபுமல்கஸ்கந்த ரஜ மகா விகாரையின் தலைவர் மற்றும் ஸ்ரீ ஷாக்யபுத்ர அறக்கட்டளையின் நிறுவனருமான வண. சாந்த போதி தேரர் புதன்கிழமை (16) வன்னி மாவட்டத்திலுள்ள கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரூ .300,000.00 மதிப்புள்ள இரண்டு சிரிஞ் பம்ப் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு வவுனியா மாவட்ட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன், அங்கு வைத்தியசாலை பணிப்பாளர் நன்கொடையாளரிமிருந்து அன்பளிப்புகளை பெற்றுக்கொண்டார். இந்த திட்டமானது, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சார்பில் 56 வது படைப்பிரிவின் படைத் தளபதி மற்றும் 563வது பிரிகேட்டின் தளபதி ஆகியோரால் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 56 வது படைப்பிரின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில,563 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 7 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, மற்றும் 21 வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.