19th June 2021 20:43:21 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரின் கீழ் இயங்கும் 591 வது பிரிகேட் சிப்பாய்களால் நந்திக்கடல் பகுதியில் தேவையுள்ள குடும்பங்களுக்கான மரக்கறி பொதிகள் செவ்வாய்க்கிழமை (15) விநியோகிக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வு 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீ.டி. சூரியபண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 591 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ பெரேரா அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 59 வது படைப்பிரிவு தளபதி , 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 24 வது இலங்கை சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி , 591வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, முல்லைத்தீவு மீன்பிடிச் சங்கத் தலைவர், முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.