Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2021 21:06:11 Hours

55 வது படைப்பிரிவினரால் வறிய குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் விநியோகம்

ஒரு அநாமதேய நன்கொடையாளர் வழங்கிய நிதியுதவியை கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவு சிப்பாய்களால் 175 மேற்பட்ட உலர் நிவாரண பொருட்களை விநியோகிக்கும் பணிகள் புதன்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டன.

குறித்த நிவாரணப் பொதிகளானது யாழ் பருத்திதுறையிலுள்ள கட்கோவலம், தும்பலை, புலோலி வடக்கு,வல்லிபுரம், துன்னலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் 55 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

55வது படைப்பிரிவின் படைத் தளபதி அறிவுருத்தலுக்கமைய மேற்படி உலர் நிவாரணப் பொதிகள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்பட்டமையும், மேற்படி பகுதியிலுள்ள வறிய குடும்பங்கள் கொவிட் - 19 பரவல் நிலைமைக்கு மத்தியில் நெருக்கடிக்கு ஆளாகும் என்பதை கருத்தில் கொண்டே மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அசங்க விக்கிரமசிங்க, மற்றும் 16 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொ்ணடனர்.