Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2021 06:44:43 Hours

ஏறாவூரில் சிவில் மக்களுக்கு 'துன்புறுத்தல்' ஏற்படுத்தியமை தொடர்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக இராணுவ விசாரணைகள் ஆரம்பம்

ஏறாவூர் பகுதியில் ஒரு சில இராணுவ வீரர்கள் நேற்று மாலை (19) இராணுத்தின் கௌரவம், ஒழுக்க விதிமுறைகளுக்கு புறம்பாக பொது மக்கள் சிலரை துன்புறுத்தியமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் உத்தரவின் பேரில், அம்முறையற்ற நடத்தையில் சம்பந்தப்பட்ட சகல இராணுவ வீரர்களது கடமைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் சகலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதியின் கட்டளைகளுக்கமைய குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவ பொலிஸ் விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான விசாரணைகள் முடிந்ததும், தவறு செய்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொள்ளும்.

(முடிவு)