Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2021 10:00:15 Hours

வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இராணுவ வீரர்கள் தேர்வு போட்டிகளில் பங்கேற்பு

இலங்கை இராணுவத்தின் 57 வது தடகள சம்பியன்ஷின் போட்டிகளின் முதல் சுற்று செவ்வாய்க்கிழமை (15) சுகததாச மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்களை தேர்வு செய்வதற்காக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மேற்படி போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன. மேற்படி சுற்றில் 78 போட்டியாளர்கள் 10 விளையாட்டிக்களில் பங்குபற்றியதுடன், அவற்றில் இரு புதிய விளையாட்டு சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

இந்த போட்டிளில் இலங்கை பீரங்கிப் படையணியின் பதவிநிலை சார்ஜன் டபிள்யூ.கே.எச். இஷான் 10.34 செக்கன்களில் 100 மீட்ட்ர தூரத்தை ஓடி மதலிடத்தை பெற்றதோடு, லான்ஸ் பொம்படியர் டபிள்யூ.எஸ்.எம். பெரேரா குண்டு போடுதல் போட்டியில் 16.89 மீட்டர் தூரம் குண்டை வீசி சாதனை படைத்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை விளையாட்டு வீரர்களின் திறனைக் கவனத்தில் கொண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துமாறு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவ தடகள குழுவின் தலைவரும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.

இராணுவ தடகள குழுவின் சிரேஸ்ட உறுப்பினர்களான பிரிகேடியர் சாணக்க ரத்நாயக்க, பிரிகேடியர் விபுல இஹலகே, பிரிகேடியர் சாணக்க ரணசிங்க, பிரிகேடியர் வசந்த லியனகே, பிரிகேடியர் பிரியந்த நவரத்ன உள்ளிட்ட சகலரும் தடகள போட்டிகளின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர்.

வெற்றியாளர்களின் விபரம் மற்றும் அவர்களின் சாதனைகள் வருமாறு:

ஆண்கள்

இலங்கை பீரங்கி படையணியின் பதவிநிலை சார்ஜன் டபிள்யூ.கே.எச். இஷான் – 100 மீற்றர் - முதலாமிடம்

இலங்கை பீரங்கி படையணியின் பொம்படியர் எஸ்.ஏ.தர்ஷன – 400 மீற்றர் - முதலாமிடம்

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சாதாரண சிப்பாய் டி.எம்.எச்.எஸ். கருணாரத்ன - 800 மீற்றர் - முதலாமிடம்

இலங்கை சமிக்ஞை படையணியின் லான்ஸ் கோப்ரல் ஏ.ஜீ.ஜே.பி.விமலசிறி – நீளம் பாய்தல் - முதலாமிடம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் பொம்படி ஆர்.எம்.ஜே.எஸ். பெர்ணான்டோ – குண்டு வீசுதல் - முதலாமிடம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் – ஈட்டி எறிதல் - முதலாமிடம்

பெண்கள்

இலங்கை சமிக்ஞை படையணியின் சாதாரண சிப்பாய் டி.டி.ஏ. டி சில்வா – 100 மீற்றர் - முதலாமிடம்

5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையின் கோப்ரல் ஆர்.நதீஷா – 400 மீற்றர் - முதலாமிடம்

2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் 100 மீ தடைத்தாண்டல் போட்டி - முதலாமிடம்

7 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் பதவிநிலை சார்ஜன் யூ.கே.என். ரத்நாயக்க 3000 மீற்றர் தடைத்தாண்டல் போட்டி - முதலாமிடம்

4 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் எச்.எல்.என்.டி லேகம்கே – ஈட்டி எறிதல் - முதலாமிடம்