18th June 2021 14:00:15 Hours
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகத்தின் படையினர் விவகார பணிப்பகத்தின் ஆகியவற்றின் நிதி உதவியின் மூலம், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை சிங்கப்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று அப்படையணியின் போர் வீரர் ஒருவரின் குடும்பத்துக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது.
வீட்டு உரிமையாளரான குறித்த அதிகாரி மருத்துவ விதிமுறையின் கீழ், படையணி பட்டலியன் தலைமையகத்தில் தற்போதும் சேவையாற்றி வருகின்ற நிலையில், வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வன்னி கிளாலி பகுதியில் வைத்து தீவிரவாதிகளின் குண்டு தாக்குதலுக்கு இலக்கானதால் அவரது வலது கை, முகம் மற்றும் வலது கண் ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டன.
மத்துகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீடு செவ்வாய்க்கிழமை (15) மேஜர் பிரஞ்சன மதரராச்சி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கையளிக்கப்பட்டது. இலங்கை சிங்கப் படையணியின் பிரதி நிலையத் தளபதி கேணல் துளித பெரேரா, பட்டாலியன்கள் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ் தஸநாயக்க,சிங்கப்படையணி மற்றும் சேவை வணிதையர் பிரிவுகளின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.