Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2021 21:04:12 Hours

சேவை வணிதையர் பிரிவினால் சீதுவையில் நிறுவப்பட்ட இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் பிரிவுகளுக்கு தனியார் துறையினரால் நன்கொடைகள் வழங்கி வைப்பு

சீதுவவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய இடைநிலை சிகிச்சை நிலையத்தை நிர்வகிக்கும் பணிகளை முன்னெடுத்துவரும் இராணுவ சேவை வனிதைய பிரிவினர் சுகாதார அதிகாரிகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்ற அதேவேளை தனியார் துறை நன்கொடையாளர்களுடனும் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு இராணுவ சேவை வணிதையர் புலனாய்வு பிரிவின் தலைவிரின் தலைமையிலான குழுவினர் ,இடைநிலை சிகிச்சை நிலையத்துக்கு அவசியமான சுகாதார, மருத்துவ பொருட்களை இராணுவ சேவை வணிதையர் அமைப்பின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களை சந்தித்து கையளித்தனர்.

அத்தோடு ஹேமாஸ் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனம் வழங்கிய நன்கொடை மூலம் இலங்கை இராணுவ சேவைப்பிரிவின் சேவை வணிதையர் பிரிவினர் கட்டில் விரிப்புக்கள், தலையணைகள், தலையணை உறைகள் மற்றும் தொற்று நீக்கிகள் ஆகியவற்றை இராணுவ சேவை வணிதையர் பிரிவின் தலைவரிடம் வழங்கிவைத்தது.

அதேபோல், அரியா பால்மா உற்பத்திகள் தனியார் நிறுவனம் மேற்படி இடைநிலை சிகிச்சை மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு வழங்குவதற்கு அவசியமான பால் மா வகைகளை வழங்கியது. சேவை வனிதையர் பிரிவின் தலைவரிடம் மேற்படி நிறுவனத்தின் முகாமையாளாரினால் குறித்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ சிப்பாய்களை கொண்டு மேற்படி இடைநிலை பராமரிப்பு நிலையத்தை கட்டமைத்தனர்.

குறித்த நிகழ்வில் இராணுவ சேவை வணிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் துஷார பாலசூரிய, தலைவர் திருமதி மனோரி செலே, இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வணிதையர் பிரிவு தலைவர் திருமதி நிஷாந்தி அபேரத்ன, நன்கொடையளித்த நிறுவனங்களில் பிரதிநிதிகளான திரு எஸ்கேடிசீ முனசிங்க மற்றும் திரு சந்திக நிரோஸ் ஆகியோர் நன்கொடைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.