18th June 2021 09:43:51 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 61 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 613 வது பிரிகேட் படையினரால் புதன்கிழமை (16) அக்குரெஸ்ஸ வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்போருக்கு நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்படி இடைநிலை பராமரிப்பு மையத்தில் தங்கியிருக்கு 50 கொவிட் - 19 நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடையை கொண்டு மேற்படி பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டல்களுக்கமைய, மேற்படி விநியோக திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், 61 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடிதுவக்கு ஆகியோரால் வைத்தியசாலை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.