16th June 2021 20:15:00 Hours
சப்புகஸ்கந்தவிலுள்ள பாதுகாப்பு சேவைக் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் பாடநெறி இல 15 பதவி நிலை (பிஎஸ்சி) பாடநெறியினை தொடரும் மாணவர் அதிகாரிகளுக்கு, ஹிங்குரங்கொட பலுவெவயில் அமைந்துள்ள கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தலைமையகத்தில், பிரதேச நிர்வாக செயற்பாடுகள் தொடர்பான செயல் விளக்கம் சனிக்கிழமை (15) நடைபெற்றது.
மேற்படி செயல் விளக்கமானது, கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் அபேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அப்படைத் தலைமையகத்தினால் பதவி நிலை அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த செயல் விளக்க பயிற்சி நெறியில் அமெரிக்கா, சவூதி அரேபியா, ருவண்டா, செனகல், பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளும் பங்குபற்றினர்.
இதன்போது நிர்வாகச் செயற்பாடுகள், கட்டண அறை அறிமுகம், யுத்த கைதிகளை கையாளும் முறை, முதலுதவி மற்றும் மீட்பு செயற்பாடுகள், அஞ்சல் மற்றும் பொருட்கள் விநியோக சேவை, நலன்புரி செயல்முறை, பொறியியல் சேவை செயல்முறை, உபகரணசெயல் முறை தொடர்பிலும், மீட்பு பணிகள் தொடர்பிலும் கற்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் மற்றும் அக்கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகளும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.