15th June 2021 16:01:04 Hours
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 12 வது படைப்பிரிவின் 20 வது சிங்கப் படையணியின் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தனமல்வில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செடி பயிர்செய்கை திங்கட்கிழமை (15) முழுமையாக அழிக்கப்பட்டது.
குறித்த பயிர்செய்கை 2 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்டிருப்பததுடன் அதன் பெறுமதி 7 இலட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் மேற்பார்வையில் பாதுகாப்பு படையினரால் மேற்படி செடிகள் அழிக்கப்பட்டன.
அதே சமயத்தில் பொலிஸார் மற்றும் படையினரால் 25 கிலோ உலர்ச்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டிருப்பதுடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேற்படி சோதனை நடவடிக்கைகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்களால் வழிநடத்தப்பட்டது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்புச் செயறிட்டத்திட்டத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் விடுக்கப்பட்ட அறிவுரைக்கமைய 12 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக அவர்களால் மேற்படி நடவடிக்கைகள் முழுமையாக மேற்பார்வை செய்யப்பட்டன.