Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2021 14:00:28 Hours

படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கல்லப்படு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் ஒரு வறிய குடும்பத்தின் வறுமை நிலைமயானது, 59 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.டி. சூரியபண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அக்குடும்பத்திற்கு சுமார் 7500 / = க்கு மதிப்புள்ள உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த நன்கொடையானது முல்லைத்தீவு புனித ஹார்ட் தேவாலய சகோதரிகளால் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு கூட்டுறவு சங்கம் அந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து வழங்கியது. 59 வது படைப் பிரிவின் படைத் தளபதியவர்கள் ஒரு சில மூத்த அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளரின் பிரதிநிதிகளுடன் இணைந்து குறித்த குடும்பத்திடம் சென்று அப்பொதிகளை வியாழக்கிழமை (11) அவர்களிடம் ஒப்படைத்தார்.