15th June 2021 15:15:04 Hours
பேராதெனிய ஸ்ரீ சுபோதர்ம சர்வதேச பௌத்த மையத்தினரின் நிதியுதவியுடன் 57 வது படைப் பிரிவின் படையினரால், கிளிநொச்சி பிரதேசத்தில் வாழும் 75 க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை (10) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த திட்டமானது, கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் எண்ணகருவிற்கமைய, 57 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்த்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட் -19 நோய் பரவல் காரணமாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டது.
மேலும், கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் உள்ள சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எல் கீத்சிரி அவர்களால் இந்த திட்டம் ஒருங்கமைக்கப்பட்டது.