Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2021 16:33:28 Hours

112 வது பிரிகேட் படையினரால் தோவ பிரதேசத்தில் தீயணைப்பு பணிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 வது படைப் பிரிவின் 112 வது பிரிகேட் படையினர் ஞாயிற்றுக்கிழமை (13) பதுல்லை மாவட்டத்தின் பண்டாரவளை பிரதேசத்தின் தோவ பகுதியில் உள்ள வெவேகொட மலைத்தொடரில் பரவிய காட்டுத் தீ அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அருகிலுள்ள பகுதியில் தடுப்பூசி திட்டத்த்திற்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கிகொண்டிருந்த படையினர், பாதிக்கப்பட்ட பகுதியை விரைவாக சென்றடைந்து சில மணி நேரங்களுக்குள் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க இந்த திட்டத்தை நெருக்கமாக கண்காணித்து ஒருங்கிணைத்தார்.

இதற்கிடையில், அதே 112 வது பிரிகேட் படையினரால் சனிக்கிழமை (12) இராணுவ புலனாய்வுப் படையினரின் தகவலுக்கு அமைய பதுல்லை மாவட்டத்தின் எலதலுவ தேமடவெல்ஹின்ன பிரதேசத்தில் ஏற்பட்ட தீ அணைத்து கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இப் பணியானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 11 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே அகியோர்களின் வழிக்காட்டலின் கீ்ழ், 112 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.