15th June 2021 12:33:28 Hours
கொவிட் தொற்றுநோய் மற்றும் பயண கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற் கொண்டு, இப்பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது.
அதற்கமைய 19 வது இலங்கை காலாட் படையணியின் படையினரால் கடந்த வியாழக்கிழமை (10) ஆம் திகதி கல்விலான், திவன்பிடி, நாச்சிகுடா மற்றும் முலாங்கவில் ஆகிய கிராம உத்தியோகத்தர் பகுதிகளில் இருந்து பயனாளிகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் இந்த நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்த திட்டமானது, 65 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார ஆகியோரின் வழிக்காட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
65 வது படைப் பிரிவின் படைத் தளபதி, பதவி நிலை அதிகாரிகள் மற்றும் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.