Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2021 19:33:28 Hours

2 வது ரோயல் பிரிட்டிஷ் இராணுவ பீரங்கி படையணி வீரர் தனது 102 வது வயதில் காலமானார்

ரோயல் பிரிட்டிஷ் இராணுவ ஆட்சேர்ப்பு இல: 410 இன் கீழ், 1948 க்கு முன்னர் ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தின் 2 வது ரோயல் பீரங்கி படையணியில் சேவையாற்றிய வீரர், இன்று (15) காலை தனது 102 வது வயதில் அம்பலாங்கொடை அஹுங்கல்லவில் அமைந்துள்ள தனது இல்லத்தில் காலமானார்.

சேவையில் இருந்து ஓய்வுபெற்ற எஸ். டபிள்யூ குணபாலா அவர்கள் 1943.01.20 – 1945.02.06 ஆம் திகதி வரை ரோயல் பிரிட்டிஷ் இராணுவத்தில் இராணுவ துப்பாக்கி சூட்டு வீரராக பணியாற்றியுள்ளதோடு, அவர் நாட்டில் வாழும் மிக வயோதிப வீரராக திகழ்ந்தார்.

1939-1945 காலப்பகுதியில் 11 ஆம் உலகப் போரின்போது அப்போதைய இராணுவத்தில் பணியாற்றியதால், அப்போதைய பிரிட்டிஷ் இராணுவம் மறைந்த துப்பாக்கி சூட்டு வீரருக்கு அவரது சேவைக்காக பாராட்டுக்குரிய விருதுகள் / பாராட்டுக்களை வழங்கியுள்ளது.

அவரது பூதவுடல் அஹுங்கல்ல தஹமதிஸ்ஸ மாவத்தையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவர் தனது 102 வது பிறந்தநாளை தனது குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.