15th June 2021 14:33:28 Hours
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் வட மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் 52 வது படைப் பிரிவின் படையினரால் நாவட்குலி பகுதியில் கொவிட் நோய் தொற்றாளர்களுக்காக மேலும் ஒரு இடைநிலை பராமரிப்பு மையம் நிறுவப்பட்டது.
அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த இடைநிலை பராமரிப்பு மையத்தில் எந்த நேரத்திலும் 200 தொற்று நோயாளர்களை அனுமதிக்கும் முகமாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு,இக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டது.
முழுமையாக நிறைவடைந்த இந்த இடைநிலை பராமரிப்பு மையமானது, 2021 ஜூன் 15 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதியால் உத்தியோகபூர்வமாக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலாளர் திரு. கணபதிபில்லை மஹேசன், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதிஸ்வரம் , பிராந்திய தொற்றுநோயியல் (யாழ்ப்பாணம்) நிபுணர் வைத்தியர் பரனீதரன், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், 51,52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், பிரிகேடியர் பொது பணி அதிகாரி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.