14th June 2021 21:41:24 Hours
வணக்கத்துக்குறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் பிலியந்தல அமிதகொஸா தேரர் ஆகியோரின் நிதியுதவியின் மூலம், முல்லைத்தீவு மன்னங்கடல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பவுள்ள புதிய வீட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் மனித வள வசதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் கீழ் உள்ள 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணகருவிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பிக்குகள் மற்றும் 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரால் சனிக்கிழமை (12) ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஜ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சி.டி.அதுல்தொல்ஆராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற் கொள்ளப்பட்டது.