14th June 2021 06:00:40 Hours
இன்று காலை (14) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,361 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 34 தொற்றாளர்கள் பல்லேவெல மற்றும் கம்பஹா , 28 தொற்றாளர்கள் கடவத்தை, 27 தொற்றாளர்கள் மீரிகம ஆகிய பிரதேசங்கள் உட்பட அதிகமாக 362 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் மற்றும் மிகுதி தொற்றாளர்கள் ஏனைய பல பிரதேசங்களிலும் இனங்காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தொடம்கொட 45 பேர் , களுத்துறை தெற்கு 39 பேர், பண்டராகம 38 பேர் உட்பட களுத்துறை மாவட்டதில் 339 கொவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதோடு, ஏனைய தொற்றாளர்கள் அம்மாவட்டத்தின் வேறு பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் 338 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 68 தொற்றாளர்கள் அவிசாவெல, 25 தொற்றாளர்கள் கல்கிஸ்ஸை, 24 தொற்றாளர்கள் நாரஹென்பிட பகுதியிலும் பதிவாகியுள்ளனர். ஏனைய தொற்றாளர்கள் மாவட்டத்தின் வேறு பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளனர்.
அதன்படி, நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவான 1322 தொற்றாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு: இரத்னபுரி 322, கண்டி 194, குருநாகல் 104, நுவரெலியா 93, கேகாலை 87, மட்டக்களப்பு 73, அம்பாறை 66, காலி 57, மாத்தளை 55, யாழ்ப்பாணம் 40, அனுராதபுரம் 36, புத்தளம் 34, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை 25, பொலன்னருவை 22 , பதுல்லை 20 , திருகோணமலை 17 , மாத்தறை 6 , மன்னார் 5 , கிளிநொச்சி 4 , முல்லைத்தீவு 3 மற்றும் வவுனியா 3 ஆகும். .