14th June 2021 13:28:36 Hours
செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்டவரும் மினுஸ்மாவின் தலைவருமான திரு எல்-காசிம் வேன் அவர்கள், 2021 ஜூன் 4 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து முக்கிய அமைப்புக்களை உத்தியோகபூர்வமாக சென்று பார்வையிட்டதோடு, இலங்கை அமைத்திகாக்கும் படை முகாம் அமைந்துள்ள கிழக்கு துறைக்கும் விஜயம் செய்தார்.
காவ் சூப்பர் முகாமுக்கு வருகை தந்த அவருக்கு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டதுடன் கிழக்கு துறை தலைமையக அலுவலக நெறிமுறையின் பிரகாரம், சிவில் பிரிவின் தலைவரான திரு. முகமது சூஃப் அவர்கள் இலங்கை அமைதிகாக்கும் படையினரினூடாக சிறப்பு பிரதிநிதி மற்றும் அவரது தூதுக்குழுவுக்கு வரவேற்பளித்துடன் அவர்களுக்கு படைத் தளபதி லெப்டினன் கேணல் தினேஷ் புலத்சிங்ஹல அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இலங்கை அமைதிகாக்கும் படை முகம் வளாக நுழைவாயிலில் வைத்து செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி, காவ் பிராந்தியத்தின் கௌரவ ஆளுநர், கிழக்கு துறை தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் மௌசா ட்ரோர், அலுவலகத் தலைவர் திரு மொஹமட் சூஃப், பதவி நிலை பிரதானி செல்வி கிளோடியா பான்ஸ், பமா பிராந்திய தளபதி கேணல் இஸ்ஸ கௌலிபலி, காவ் பிராந்திய மேயர் திரு பௌபகர் டக்கா மற்றும் ஏனைய பிரதிநிதிக் குழுவினர் ஆகியோருக்கு இராணுவ பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி மற்றும் அவரது தூதுக்குழு பாரம்பரியமாக படைத் தளபதியால் வரவேற்கப்பட்டனர், அதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் இலங்கை இராணுவத்தை காட்சிப்படுத்திய ஒரு குறுகிய வீடியோ காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இலங்கை அமைதிகாக்கும் படை பிரதிநிதிகள் மற்றும் பிரதிநிதிக் குழுவினரிடையிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது சிறப்பு பிரதிநிதியவர்கள் இலங்கை அமைதிகாக்கும் படை குறித்த தனது நம்பிக்கையை தொடர்ந்து தளபதியுடன் பகிர்ந்து கொண்டதோடு, அமைதிகாக்கும் படையின் வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான பணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் அதிதிகள் புத்தகத்தில் தனது கருத்துக்களையும் பதிவிட்டார். தனது பதிவில் இலங்கை அரசாங்கத்திற்கும், குறிப்பாக இராணுவத் தளபதியுக்கும் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி மற்றும் காவ் பிராந்தியத்தின் கௌரவ ஆளுநர் ஆகியோருக்கு படைத் தளபதியினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.