14th June 2021 08:23:39 Hours
கொவிட் தொற்றலையினால் ஏற்படும் சவாலினை முகங் கொடுக்கும் முகமாக பிரதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய 58 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் வழிக்காட்டலின் கீழ் கொவிட் -19 தொற்று நோயர்களுக்காக புதிய இடைநிலை பராமரிப்பு மையத்தை நிர்மாணிப்பதற்கான பணிகள் புத்தளம் மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பித்து வைத்தனர்.
இப் புதிய இடைநிலை பராமரிப்பு மையத்தின் கட்டுமான பணிகள் மே 31 ஆம் திகதி பல கலந்துரையாடல்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது. பிரதேசத்தில் கொவிட் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுமான பணிகளுக்கான தீர்மாணம் எடுக்கப்பட்டன. அதன்படி, புத்தளம் மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொவிட் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பை தொடர்ந்து இந்த இடைநிலை பராமரிப்பு மையம் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கபடவுள்ளன.
,நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றலையின் காரணமாக ஏற்பாடு செய்யப்படுகின்ற படுக்கை வசதி மற்றும் இடை நிலை பராமரிப்பு மையங்களின் அதிகரிப்பிற்கு பின்னணியாக திகழ்கின்ற கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், குறித்த நிலையத்தை சில நாட்களுக்குள் இடை நிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைக்குமாறு 58 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரனசிங்க அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.