Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2021 16:21:44 Hours

குண்டசாலையிலுள்ள பௌத்த மடாலயமானது இடை நிலை பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டது

கொவிட்-19 நோயாளிகள் அதிகரித்தமையினால் அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முகமாக, கண்டி குண்டசாலையிலுள்ள மகாமேவுனவ பௌத்த மடாலயமானது, ஒரு இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டது. இந்த திட்டமானது 11 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே மற்றும் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றலையின் காரணமாக ஏற்பாடு செய்யப்படுகின்ற படுக்கை வசதி மற்றும் இடை நிலை பராமரிப்பு மையங்களின் அதிகரிப்பிற்கு பின்னணியாக திகழ்கின்ற நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், குறித்த நிலையத்தை சில நாட்களுக்குள் இடை நிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைக்குமாறு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

1 வது இலங்கை ரைபிள் படையணியின் படையினர், பொறியியலாளர்கள் சேவைப் படையணியின் படையினர் சுகாதார அதிகாரிகள், மத்திய மாகாண ஆளுநர், மாகாண சபை அதிகாரிகள், கண்டி மாவட்ட செயலாளர், குண்டசாலை பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து தங்களது ஒத்துழைப்பை இந்த திட்டத்திற்கு வழங்கினர். இந்த இடை நிலை பராமரிப்பு மையமானது சனிக்கிழமை (12) சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த புதிய மாற்றப்பட்ட இடை நிலை பராமரிப்பு மையத்தில் 1000 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதோடு அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்காக படையினருடன் இணைந்து அயராது அர்ப்பணித்த 11 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் அதை உத்தியோகபூர்வமாக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

குறித்த திட்டமானது நிறைவுபெறும் வரை படையினரை 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்கள் மேற்பார்வையிட்டார்.