13th June 2021 18:05:58 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவு படையினர் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து குருண்டுவத்த கம்பொலவிலுள்ள சோமர்செட் தேயிலை தொழிற்சாலையை ஒரு இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைத்தனர். கொவிட் தொற்றினால் பாதிப்புக்குள்ளான 300 தொற்றாளர்களுக்கு இங்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதோடு, நிறைவு பெற்ற குறித்த மையமானது 2021 ஜூன் 06 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளிடம்கையளிக்கப்பட்டது.
நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றலையின் காரணமாக ஏற்பாடு செய்யப்படுகின்ற படுக்கை வசதி மற்றும் இடை நிலை பராமரிப்பு மையங்களின் அதிகரிப்பிற்கு பின்னணியாக திகழ்கின்ற நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், குறித்த நிலையத்தை சில நாட்களுக்குள் இடை நிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைக்குமாறு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லாமாஹேவகே அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
குறித்த மையத்தின் கையளிப்பு நிகழ்வில் விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கண்டி மாவட்ட செயலாளர், 11 வது படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே, நாவலப்பிட்டி வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஒரு சில சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த புதிய மையமானது அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.
குறித்த நிகழ்வின் போது 11 வது படைப் பிரிவுத் தளபதி இடை நிலை பராமரிப்பு மையத்தினை உத்தியோகபூர்வமாக சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். குறித்த திட்டமானது நிறைவுபெறும் வரை படையினரை மேற்பார்வையிட்ட 111 வது பிரிகேட் தளபதியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.