Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2021 16:35:00 Hours

படையினர் சுகாதார நிபுணர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களே தவிர குறுக்கீடுகளுக்கு அல்ல - நொப்கோ தலைவர்

இராணுவத்தின் திறன் மற்றும் தொழில்முறை திறன்களை நன்கு அறிந்த அதிமேதகு ஜனாதிபதியின் உத்தரவின் கீழ், "கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான இராணுவம் மற்றும் சேவைப் பணியாளர்கள், சுகாதார நிபுணர்களுக்கு உதவும் முகமாக, அவர்கள் பிரத்தியேகமாக முன்னணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணிகளில் அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் இந்த உதவியினை 'குறுக்கீடு' என்று தவறாகப் புரிந்து கொள்ளவோ அல்லது தவறாக விளங்கிக்கொள்ளவோ கூடாது.

நாம் புரிந்துகொண்டபடி, தகவல் பறிமாற்றத்தில் பல தாமதங்கள் இருப்பதால் அடிப்படையில் சில சுகாதார நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் விரைவு படுத்தப்படவேண்டும் என்று நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கருத்து தெரிவித்தார்.

இன்று (12) காலை நொப்கோவில் தொற்றுநோயியல் நிபுணர்கள், சுகாதார நிபுணர்கள், நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பணிக்குழு அமர்வில், தனது கருத்துக்களை தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, தொற்றுக்கள் இனங்காணல் மற்றும் கொவிட்-19 இறப்புகள் குறித்த எண்ணிக்கை வித்தியாசம் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் எல்லா நேரத்திலும் ஒத்திசைவானவை அல்ல மற்றும் காலங்கடந்தவையாக காணப்படுகின்றன என குறிப்பிட்ட அவர் , அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு இறுதியாக அரசாங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்கான வெளியீட்டு நிலையமான நொப்கோவிற்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

சனிக்கிழமை (12) பணிக்குழு அமர்வு நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெல குணவர்தன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், நல்ல கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த தொற்றுநோய்களின் போது அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்த தொற்றுநோயியல் பிரிவினர் இன்று பிரசன்னமாகியிருந்தமைக்கு, ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார். ஆனால் அவற்றின் நடைமுறைகள் மேலும் விரைவுபடுத்தப்பட்டு அதிக நம்பகத்தன்மைக்கு நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எடுத்துக்காட்டாக, கடந்த 3 வாரங்களில் ஏற்பட்ட இறப்புகள் குறித்த அறிக்கைகள் ஒரு சிக்கலான விம்பத்தைக் கொடுத்து வருகின்றன, மேலும் இதுபோன்ற தகவல்களை விரைவாக சென்றடையச் செய்வதற்கான விரைவான உத்திகளின் அவசியத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கான தற்போதைய திட்டம் மற்றும் வரும் நாட்களில் பயண கட்டுப்பாடுகள் எவ்வாறு செயல்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

நீட்டிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து அவர் கூறுகையில், நிபுணர்களுடனான விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அனைத்து இலங்கையர்களின் நலனுக்காக பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதற்கு ஜனாதிபதி முடிவுசெய்தார். இந்த நாடு ஒரு சிறிய பொருளாதாரம் கொண்ட வளரும் நாடு என்பதால் நாட்டை தொடர்ச்சியாக மூடவும் முடியாது என்று அவர் விளக்கினார். இது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நோக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், குறித்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டதோடு, தடுப்பூசி செயல்முறை மற்றும் இறப்புகள் தொடர்பான தகவல்களில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்து விளக்கமளித்தார். தொற்றுநோயியல் பிரிவு பிரதிநிதிகள் பி.சி.ஆர், எழுமாற்று பி.சி.ஆர் சோதனைகள், விரைவான ஆன்டிஜென் சோதனைகள் போன்றவற்றை சமீபத்திய அரசாங்க சுற்றறிக்கைகளுக்கு ஏற்ப நடத்துவதற்கான மூலோபாயத்தினையும் குறிப்பிட்டனர்.

இந்த கலந்துரையாடலில் துல்லியமான செயல்பாடு மற்றும் அனைத்து துறைகளின் செயல்திறனையும் பராமரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தப்பட்டது, குறிப்பாக பி.சி.ஆர் சோதனைகள், விரைவான ஆன்டிஜென் சோதனைகள், நோயாளிகளை வெளியேற்றுவது, ஆய்வக செயல்முறை, இறப்பு அறிக்கை, சட்ட செயல்முறை, தரவு பரிமாற்றம் , தடுப்பூசி, தொற்று விகிதங்கள், தேசிய பணிக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பான துறையினராக அக்கறையுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டன.

இந்த நிபுணர் குழு விவாதத்தின் போது மற்ற நிபுணர் குழு உறுப்பினர்கள் தங்கள் தீர்வுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.