11th June 2021 21:05:09 Hours
மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஏராவூர் மற்றும் ஆரியம்பதி பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு இலவச மதிய உணவுகளானது, செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி வழங்கப்பட்டன.
இந்த திட்டமானது 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் கீழ் இயங்கும் 4 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 11 வது (தொண்) இலங்கை சிங்கப் படையணி பட்டாலியன் ஆகியவற்றின் படையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் நோய் தொற்று வைரஸ் பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி அவர்கள் இதற்கான முன்முயற்சி எடுத்தார்.
இந்த சமூக நல திட்டத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பொதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடதக்க விடயமமாகும்.