Header

Sri Lanka Army

Defender of the Nation

11th June 2021 22:05:09 Hours

படையினரின் ஒருங்கிணைப்பில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 வது படைப் பிரிவின் படையினர்களின் ஒருங்கிணைப்பில் வெள்ளம்பிட்டி, கடுவெல மற்றும் கெலனிமுல்ல ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணர்வு பொதிகள் விநியோகிக்கும் திட்டமானது திங்கள்கிழமை (7) ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

இத் திட்டமானது அப்பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரினால் வழங்கப்பட்ட நன்கொடை மூலம் அரிசி, பருப்பு, சீனி , பால் மா, உப்பு, தேயிலை, வெங்காயம் உள்ளிட்ட ரூ. 200,000 இற்கும் அதிக மதிப்புள்ள பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அதற்கமைய 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினர் 100 குடும்பங்களுக்கு அந்த உலர் உணவு பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

இதற்கிடையில், அதே 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் வியாழக்கிழமை (10) கொட்டுவில, வெலிவிட்ட மற்றும் வெக்கவத்த ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு 480 குடிநீர் போத்தல்களை வழங்கினர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ், 144வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த லியனவடுகே அவர்கள் இந்த திட்டத்தை ஒருங்கிணைத்து இத் திட்டங்களை நிறைவேற்ற தனது படையினரை ஏற்பாடு செய்தார்.