10th June 2021 18:05:25 Hours
சில பகுதிகளில் சீரற்ற கால நிலை நிலவுகின்றவேளையிலும் கூட, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது பிரிகேட்டின் 144 பிரிகேடின் கீழ் உள்ள 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 2 வது(தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் தொடர்ந்தும் தங்கள் நிவாரணப் பணிகளைத் தொடர்கின்றனர்.
6 கந்தொழுவெவ கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மகலகொட பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கித் தவித்த 5 குடும்பங்களை படகுகளைப் பயன்படுத்தி 6 வது இலங்கை பீரங்கி படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்தனர்.
இதேபோல், 144 பிரிகேட்டின் கீழ் உள்ள 2 வது(தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் படகுகளைப் பயன்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர், மற்றும் கோட்டை, கடுவெல மற்றும் கொலன்னாவை பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றதுடன், 3000 க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு சமைத்த இரவு உணவுப் பொதிகளை வழங்கினர். அதே சந்தர்ப்பத்தில் கொலன்னாவை பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட உலர் உணவு பொதுகளையும் அவர்கள் வழங்கினர்.
இந்த சமூக நிவாரணத் திட்டங்கள் அனைத்தும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றன.
இதற்கிடையில், 14 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா, 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே, 144 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் லசந்த லியனவடுகே மற்றும் 8 வது இலங்கை இலசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயத்தினை மேற் கொண்டு அதனை மேற்பாரவை செய்தனர்.
இதற்கிடையில், அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 வது படைப் பிரிவின் 141 வது மற்றும் 144 வது பிரிகேட்டின் கீழ் உள்ள 8 வது இலசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலசாயுத காலாட் படையணியின் படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் திட்டங்கள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன்படி 8 வது இலங்கை இலசாயுத காலாட் படையணியின் படையினர் திங்கள்கிழமை (7) தொம்பே பிரதேச செயலக பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு 500 பிஸ்கட் பக்கெட்டுகள் மற்றும் 1680 தண்ணீர் போத்தல்களை வழங்கினர்.
இதற்கிடையில், 144 பிரிகேட்டின் கீழ் உள்ள 2 வது (தொ) இலங்கை இலசாயுத காலாட் படையணியின் படையினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த காலை உணவு மற்றும் மதிய உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கடுவெல மற்றும் கொலன்னாவை பகுதிகளில் உள்ள அந்தந்த பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் இதே சந்தர்ப்பத்தில் விநியோகிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் 14 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யப்பா, 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே, 144 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லசந்த லியனவடுகே மற்றும் 8 வது இலங்கை இலசாயுத காலாட் படையணி மற்றும் 2 வது (தொ) இலங்கை இலசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள் ஆகியோர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்து கண்காணித்தார்.