10th June 2021 20:08:11 Hours
2021 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் மருத்துவ அதிகாரி லெப்டினன்ட் கேணல் வைத்தியர் ரிபாத் சமான் தலைமையிலான குழுவினர், தென் சூடானின் இலங்கையின் 7 வது படைப் பிரிவின் சிறிமெட் நிலை II வைத்தியசாலையின் செயல்பாட்டு அம்சம் குறித்த வழக்கமான செயல்பாட்டு தயார்நிலை மதிப்பீட்டின் போது, சிறிமெட் நிலை II வைத்தியசாலையின் வெகுஜன விபத்து தயார்நிலையை நிர்வகிப்பதில் உகந்த அறிவு, அனுபவம், விடாமுயற்சி மற்றும் திறன்களைக் கொண்ட கடமைகளை பாராட்டுதெரிவித்தனர்.
சிறிமெட் இன் போலி செயல் விளக்கம் மற்றும் பயிற்சியின் தொடக்கத்தில் மேஜர் சமித் குலதுங்க அவர்கள் அங்கு வருகையினை மேற்கொண்ட அணியை வரவேற்றார், அதனைத் தொடர்ந்து கேணல் ரோஷான் ஜயமண்ணவினால் தெற்கு சூடானின் சிறிமெட் எல் 2 போர் தொடர்பான அறிமுகப் பேச்சும் இடம் பெற்றது.
இதில் சிறிமெட் வைத்தியசாலையின் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் குழுத் தலைவர், மதிப்பீட்டுக் குழு மற்றும் அலகு ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு, அகநிலை நடவடிக்கைகளை விட குறிக்கோள், கிழக்கு துறையில் செயல்பாட்டு ஒத்துழைப்பின் தொடர்புடைய அம்சங்கள் மற்றும் லெவல் 2 மருத்துவ வசதியாக கிழக்கு துறை குழு திட்டத்திற்கு முன்னெடுக்கப்பட்ட ஒத்துழைப்பு தற்செயல் திட்டம் பற்றிய அறிவு, அனைத்து துறைகள் / கிளைகளுக்கான தெற்கு சூடான் ஆவணத்தில் நிலவும் காட்சி சார்ந்த பயிற்சி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் போன்றவையும் அடங்கும்.
40 வெளிநோயாளிகளுக்கு அறுபது நாட்களுக்கு போதுமான மருத்துவ விநியோகத்தை வழங்குதல் போன்றவை இந்த மறுஆய்வு பயிற்சி மற்றும் மதிப்பீட்டு செயல்பாட்டின் போது மதிப்பீடு செய்யப்பட்டன.
கலந்துரையாடலின் போது, அனைத்து பதவி நிலை அதிகாரிகளும் குறிப்பாக லெப்டினன்ட் கேணல் வைத்தியர் ரிபாத் சமான் அவர்கள் சிறிமெட் வைத்தியசாலையை பாராட்டி தனது கருத்துக்களை முன்வைத்தார். மற்றும் அவர்களின் அனுபவங்களுடன் கூடிய வைத்தியசாலையின் நிலையின் முன்னேற்றம் தொடர்பான பரந்துரைகளையும் பகிர்ந்துகொண்டார்.
மருத்துவ சேவை, குழு மற்றும் கிழக்கு கிழக்கு ஊழியர்களுடனான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, கொவிட் - 19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கான தயார்நிலை, கொவிட் - 19 பி.சி.ஆர் வசதி, அவசர சிகிச்சைத் துறையின் அவசர சிகிச்சை தயாரிப்பு மற்றும் விமான மருத்துவ வெளியேற்றத்தின் திறன்களை ஆய்வுக் குழுவுக்கும் மிகவும் பாராட்டியது.