10th June 2021 19:03:56 Hours
64 வது படைப் பிரிவு, 641 பிரிகேட் மற்றும் 14 வது சிங்க படையணியின் கீழ் இயங்கும் வசந்திபுரம் பயிற்சி பாடசாலையில் 213 பேர் மற்றும் 643 வது பிரிகேட் மற்றும் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கீழ் 224 பேர் தங்கள் ஆட்சேர்ப்பு பயிற்சிகளை 07 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்தனர்.
இப் பாடநெறியின் ஆரம்ப நிகழ்விற்கு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடக்க உரைகளை நிகழ்த்தினார். அவர்களின் அடிப்படை பயிற்சியானது 2021 செப்டம்பர் 25 ஆம் திகதி நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன, 641 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.பி.ஜே.சி ஜயவர்தன, 643 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.பி.டி சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் இராணுவ முன்னோக்கி வழி மூலோபாயம் 2020- 2025' இன் கருத்தியல் வழிகாட்டுதலின் பேரில் இந்த ஆட்சேர்ப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டன, அடுத்த சில மாதங்களில் பணியாளர்களின் இடை வெளிகளை நிரப்புவதற்காக இதன் மூலம் சுமார் 35,000 பேர் மறுபடியும் இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.