11th June 2021 19:05:09 Hours
இராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை (10) பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிலையுயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்னவிற்கு புதிய 'மேஜர் ஜெனரல்' நிலைக்கான அடையாளச் சின்னங்களை அணிவித்து அலங்கரித்தார்.
தற்போது கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதியாக கடமையாற்றும் அவர் இலங்கை இராணுவ சேவை படை தயாரித்த பெருமை வாய்ந்த வீரர்களில் ஒருவராவார். மேலும் சேவை படையின் படைத் தளபதியாகவும் உள்ளார். வியாழக்கிழமை நடைப்பெற்ற கூட்டத்தின் போது இராணுவத் தளபதி அவரின் நிலையுயர்விற்காக வாழ்த்து தெரிவித்தார். பொதுவாக இலங்கை இராணுவ சேவைப் படைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் புதிய பகுதிகளில் சேவைப் படையின் பங்கை மேலும் மேம்படுத்துதல் குறித்து விசாரித்தார். சேவைப் படையின் வெவ்வேறு அலுவலகங்களையும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கை இராணுவ கரப்பந்து குழுவின் தலைவராக இராணுவ கரப்பந்து தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குறிப்பாக மற்ற இராணுவ களத்தில் உலகளாவிய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு இதுபோன்ற விளையாட்டுக்கள் அறிவின் எல்லைகளை அதிகரிக்கவும் மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்னேவிடம் கோரிக்கை விடுத்தார்,
அதிகாரத்தின் சின்னமாக ஒரு வாளின் பிரதியையும் ஒரு கோலையும் களையும் வழங்கி வைத்தார். முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய நிலையினை பெற்றுக் கொண்டதை அடுத்து கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மற்றும் சேவைப் படையின் படைத் தளபதி ஆகியோருக்கு நியமனம் கடிதங்கள் வழங்கினார். பதவியுயர்வு பெற்றவர் இறுதியில் இராணுவத் தளபதியின் பாராட்டுதலுக்கும் அவரது அன்பான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்னே யுத்த காளத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதுடன் இராணுவ மற்றும் சேவைப் படையணியின் முதன்மை பதவிகள் பலவற்றை அலங்கரித்துள்ளார்.