07th June 2021 15:20:26 Hours
கனகராயங்குளம் ஸ்ரீ சம்புத ராஜ மகா விகாரையில் முன்மொழியப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான அடிக்கல் வாட்டும் விழா திங்கட்கிழமை (07) சுகாதார வழிகாட்டுதல்களுடன் நடைபெற்றது.
கனகராயங்குளம், ஸ்ரீ சம்புத ராஜ மகா விகாரையின் தலைமை தேரரும் வடக்கு மாகாணத்தின் உப பிரதான சங்கநாயக்க வணக்கத்திற்குரிய சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ சுமன மங்கள சித்தார்த்த எட்டம்பகஸ்கட ஸ்ரீ கல்யாண திஸ்ஸ தேரர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பெரேரா, 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில, 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த ரத்நாயக்க, பிரதேச செயலாளரும் உதவி கோட்ட செயலாளருமான வவுனியா வடக்கு திரு. ஐ பிரதாபன், திரு கே ஆனந்தன், 561 வது பிரிகேட் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.