09th June 2021 10:14:37 Hours
படைவீரர்களுக்கும் சமூகத்தில் வீடற்றவர்களுக்கும் புதிய வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதன் நோக்கில் இராணுவ தளபதியின் பார்வைக்கு ஏற்ப, களுத்தறை நாகொடையில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணியின் மேற்பார்வையில் 7 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு, 7 வது கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு 7 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயமன்ன அவர்கள் கலந்து கொண்டு 2021 ஜூன் மாதம் 04 ஆம் திகதி சம்பிரதாய முறைப்படி வீட்டைத் திறந்து வைத்தார். இந்த வீடு பயனாளியால் வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
இப் புதிய வீடானது ரூ .1.5 மில்லியன் பெறுமதியான கட்டுமான செலவின் ஒரு பகுதியை இராணுவ தலைமையகம் வழங்கியுள்ளது.
இதேபோல், கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தின் மேற்பார்வையில் 4 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் ஒரு புதிய வீடு 4 வது கெமுனு ஹேவா படையணியின் ஊனமுற்ற ஆணைச்சீட்டு அதிகாரி - II (ஓய்வு) ஒருவருக்கு கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி அவர்களால் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டது.
அதேபோல் 2021 ஜூன் மாதம் 04 ஆம் திகதி அலுத்கம தர்கா நகரத்தில் அமைக்கப்பட்ட புதிய வீடு 4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் அழைப்பை ஏற்று கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயமன்ன அவர்கள் புதிய வீட்டை திறந்து வைத்தார்.
1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த புதிய வீடு பயனாளியால் வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டது.