Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 17:01:49 Hours

தொண்டர் படையணிக்கு பல வசதிகளுடனான நவீன பயன்பாட்டுக் கட்டடம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன சிற்றுண்டிசாலை உள்ளடக்கிய அதிநவீன பயன்பாட்டுக் கட்டட வளாகம் செவ்வாய்க்கிழமை (1) தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் திறந்து வைக்கப்பட்டு படையினர் பாவனைக்கு விடப்பட்டது.

சிற்றுண்டிச்சாலை, தையல் கடை, சலூன் கடை மற்றும் சலவை ஆகியவற்றைக் கொண்ட இப்பயன்பாட்டு கட்டிடம் மூலம் தொண்டர் படையணி தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் நலன்புரி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். இந்த திறந்து விழாவின் பிறகு சலவை சேவைகளை தொண்டர் படையணி தளபதி ஆலோசனையின் பேரில் தொண்டர் படையணி உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றிய திறப்பு விழாவில் இலங்கை இராணுவ தொண்டர் படையின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜெயசிங்க மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.