Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 17:09:03 Hours

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் படையினர்

141 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் 142 வது பிரிகேட்டின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மிரிகம, போகுலகம பகுதி மற்றும் எம்புல்கம பகுதிக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுப்பட்டனர்.

இந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அனைத்தும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே , குறித்த பகுதியின் படைப்பிரிவு தளபதி மற்றும் பிரிகேட் தளபதிகள் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.

போகுலகமவின் மீரிகமவில், நேற்று மாலை (3) பலத்த மழை காரணமாக மண்சரிவில் வீட்டினுள் உயிருடன் புதையுண்ட ஒரு பெண் (59) மற்றும் உடல் ஊனமுற்ற 65 வயதுடைய ஆண் ஒருவரையும் படையினர் ிட்டனர்.

இதற்கிடையில், 14 வது படைப்பிரிவின் 142 வது பிரிகேட்டின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினர் ஹங்வெல்ல எம்புல்கம ரஜமகா விகாரை பாதையில் விழுந்த பெரிய மரங்கள், மண் மேடுகள், கற்பாறைகள் மற்றும் பிற தடைகளை அகற்றினர்.

14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜிவ யாப்பா, 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே, 142 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிலந்த பெர்னாண்டோ மற்றும் அப்பகுதி பொறுப்பு படை அலகுகளின் கட்டளை அதிகாரிகளுடன் இணைந்து அந்தந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.