Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2021 19:11:45 Hours

முல்லைத்தீவு மற்றும் கோகவில் தாக்குதல்களின் அனுபவங்களைப் பற்றிய மேலும் இரண்டு புதிய புத்தகங்கள் வெளியீடு

மே 2009 க்கு முன்னர் நடந்த யுத்த வெற்றியின் வீர சாகசத்தையும், போரின் பல விலைமதிப்பற்ற உயிர்த்தியாகங்களையும் கடுமையான போர்களையும் விவரிக்கும் உளவியல் தொழிற்பாட்டு பணிப்பகத்தின் இராணுவத்தின் 'ரணவீருவா' பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மேஜர் சுஜித் சமிந்த எதிரிசிங்க எழுதிய இரண்டு புதிய புத்தகங்களின் முதல் பிரதிகள் இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் வழங்கியதன் பின்னர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

"மரனய மெதின் முல்லைத்தீவு சிட்ட" (மரணத்தின் மத்தியில் முல்லைத்தீவிலிருந்து) மற்றும் "அவி பிமக கினியம" (ஒரு போர்க்களத்தின் பதற்றம்) ஆகியவற்றின் வெளியீடு விழா மே 18 அன்று 12 வது வெற்றி தினத்தினை முன்னிட்டு இடம்பெற்றது. அந்த புத்தகங்கள் முறையே 1996 ஜூலை பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை, 30 ஆண்டுகால யுத்த வரலாற்றில் மிலேச்சதனமான எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு மற்றும் 1990 ல் நடந்த கொக்காவில் தாக்குதல், இதில் கொக்காவில் தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரிந்த முகாமுக்குள் இருந்த 61 பேரில் ஐம்பத்து நான்கு வீரர்களும் நான்கு சிவில் ஊழியர்களும் கொல்லப்பட்டமை போன்ற முக்கியமான தருணங்கள். விபரிக்கின்றன.

தொடர்ச்சியான ஆராய்வுகளின் பின்னர் உண்மைகள் மற்றும் நம்பகமான தகவல்களின் அடிப்படையில், இரு புத்தகங்களும் விரிவான பாதுகாப்பு உத்திகள், தந்திரோபாயங்கள் கையாளுதல்கள், ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் எதிரிக்கு எதிரான கூட்டு எதிர் தாக்குதல்களின் இராணுவ வீரர்களின் உந்துதல்களை விபரிக்கப்படுகின்றன. இந்த இதயத்தைத் நிறுத்தும் மற்றும் தொடும் கதைகளின் முக்கியத்துவம் முன்னர் ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இரண்டு புத்தகங்களையும் அர்ப்பணிப்பு சேவை செய்த போர் வீரர்களுக்கு அர்பணிக்கும் ஆசிரியர், அந்த துணிச்சலான செயல்களின் சரியான நிமிட விபரங்களை தொகுப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விரிவான ஆராய்வு திட்டத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார், இன்னும் உயிருடன் உள்ள சிலரை நேர்காணல் செய்கையில் அவர்களிடம் மீண்டும் சொன்னது போல் கேட்டது.

சுவாரஸ்யமான போர் அனுபவங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான கணக்குகள் குறித்து இன்னும் சில ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியுள்ள மேஜர் சுஜித் சமிந்த எதிரிசிங்க, மேலும் அறிவினை பெறுவதற்காக வாசகர்களின் பரந்த பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார், அவ்வாறு செய்ய விரும்புவோர் தொபேசி இலக்கம்: 077- 2649344 / 071-0545710 கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்.

இரண்டு புத்தகங்களும் இப்போது சரசவி பதிப்பகம் உள்ளிட்ட முன்னணி புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன.